விதிகளை மீறிய ஷகிப் அல் ஹசன்..! கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க முடிவு..!
பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். இவர் சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்து சில வீரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்த கோரிக்கையில் இரண்டைத் தவிர மற்றவை ஏற்பதாக கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரபல டெலிகாம் நிறுவனத்தின் கிராமின் போன் நிறுவன தூதரக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணியில் விளையாடும் வீரர்கள் டெலிகாம் நிறுவனகளில் தூதரக இருக்க கூடாது என ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் அதை ஷகிப் அல் ஹசன் மீறி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில் , “கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி ஷாகிப் அல் ஹசனின் தூதராக உள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.