இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இதன்மூலம் இந்த வருடம் ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50 க்கு மேல் சராசரி வைத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு ஐசிசி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டுத் தெரிவித்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில் ” விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர்.மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள். உங்களது விளையாட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய செய்யும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…