“நாயகன் மீண்டும் வாரார்”..WWE-க்கு மீண்டும் திரும்பும் செத் ரோலின்ஸ்! எப்போது தெரியுமா?
ரசிகர்கள் அனைவரும் செத் ரோலின்ஸ் எப்போது WWEக்கு திரும்புவார் என காத்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா : WWE-போட்டியில் பறந்து பறந்து விளையாடக் கூடிய வீரர்களில் ஒருவர் தான் செத் ரோலின்ஸ். அப்படி விளையாடுவது மட்டுமின்றி தனது பேச்சுத் திறமையாலும் அவர் பல ரசிகர்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று கூட சொல்லாம். விளையாடுவது மட்டும் முக்கியம் இல்லை தன்னை எதிர்த்து விளையாட வரும் வீரர்களுக்கு தன்னுடைய பேச்சின் மூலம் பயத்தைக் காட்டக்கூடிய அளவுக்கு செத் ரோலின்ஸ்க்கு பேசத் தெரியும்.
எனவே, செத் ரோலின்ஸ் விளையாட்டு என்றாலே ஒரு தனித்துவமான பாணியில் இருக்கும் என்பதால் அவருடைய விளையாட்டை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனால், கடந்த 4 மாதங்களாக அவருடைய விளையாட்டைப் பார்க்காமல் ரசிகர்கள் அவரை மிஸ் செய்துள்ளனர். காயம் காரணமாக அவர் WWE-யில் இருந்து விலகி இருக்கிறார்.
கடைசியாக, அவர் சிஎம் பங்க் மற்றும் மெக்கிண்டயர் இடையேயான சம்மர்ஸ்லாம் போட்டிக்கு செத் ரோலின்ஸ் நடுவராக இருந்தார். அதன் பிறகு அவர் எந்த போட்டிகளும் விளையாடவில்லை. அதற்கு முக்கிய காரணமே, அந்த போட்டிக்கு முன்னதாக, ப்ரோன்சன் ரீட் அவரை கொடூரமாகத் தாக்கியது தான்.
அவர் மிகவும் கடும் கோபத்துடன் தாக்கிய காரணத்தால் செத் ரோலின்ஸ்க்கு ரத்தமே வந்துவிட்டது. இதில் செத் ரோலின்ஸ்க்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விளையாட்டை விட்டு விலகி இருந்தார். கிட்டத்தட்ட விலா எலும்புகளில் விரிசல் மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருடைய, உடல் நலம் எப்படி இருக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்றாலும், 4 மாதங்கள் விளையாடமாட்டார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பிரபல செய்தி நிறுவனமான சீரோ நியூஸ் செத் ரோலின்ஸ் எப்போது திரும்பி வருவார் என்பதற்கான லேட்டஸ்ட் தகவலை வெளியீட்டு இருக்கிறது.
அதாவது, செத் ரோலின்ஸ் WWE-யில் விளையாட அடுத்த ஆண்டு ஆகும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் நாயகன் மீண்டும் வாரார் என கூறி அவருடைய விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.