#Breaking:அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லிம்ஸ் விலகல்…!
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க ஒபனில் இருந்து விலகுவதாக செரீனா அறிவித்துள்ளார்.
Serena Williams withdraws from US Open due to injury
Read @ANI Story | https://t.co/Qwdophf71U#USOpen pic.twitter.com/w85lJyNIqP
— ANI Digital (@ani_digital) August 25, 2021
மேலும்,இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
“கவனமாக பரிசீலித்து, எனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையைப் பின்பற்றி, எனது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து முழுமையாக குணமடைய அமெரிக்க ஓபனில் இருந்து விலக முடிவு செய்தேன். நியூயார்க்,உலகின் மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகும், மேலும் நான் விளையாடுவதற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, நான் ரசிகர்களைப் பார்ப்பதை இழக்கிறேன், ஆனால் தூரத்திலிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்துவேன்.உங்களின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி,விரைவில் நான் தங்களை சந்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
செரீனா வில்லியம்ஸ்,ஃப்ளஷிங் புல்வெளியில் ஆறு முறை சாம்பியன் பட்டம் மற்றும் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.