மூன்று வருடம் கழித்து பட்டம் வென்ற செரீனா..! வென்ற பணத்தை காட்டுத்தீ பாதிப்புக்கு அளித்து அசத்தல்.!
- செரீனா வில்லியம் கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
- பட்டம் வென்று கிடைத்த பரிசுத் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கொடுத்த செரீனா.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் தற்போது ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.நேற்று நடைபெற்றஇறுதி போட்டியில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை ,செரீனா வில்லியம்ஸ் எதிர் கொண்டார்.இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தினார்.
செரீனா வில்லியம் கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 24-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா..? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போட்டியில் பட்டம் வென்று கிடைத்த பரிசுத் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்க செரீனா கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.