இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை இழந்தது.இப்போட்டியில் மோமினுல் ஹக் , முகமது மிதுன்ப், முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.
தொடக்க வீரர் ஷாட்மேன் மட்டும் அதிகபட்சமாக 29 ரன் அடித்தார்.மற்ற அனைத்து வீரர்களும் ஒன்றை இலக்கு ரன்னுடன் விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் , ரோஹித் இருவரும் களம் இறங்கினர்.முதல் டெஸ்ட் போட்டி போல அதிரடியான ஆட்டத்தை மாயங்க் அகர்வால் வெளிப்படுத்துவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாயங்க் அகர்வால் ஆட்டம் தொடக்கத்திலே 14 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
பின்னர் புஜாரா களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் ரோஹித் 21 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.இதையடுத்து இறங்கிய கேப்டன் கோலி ,புஜாரா கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
சிறப்பாக விளையாடிய புஜாரா அரைசதம் அடித்து 55 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து கோலியும் அரைசதம் விளாசினார்.இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் உள்ளனர்.
களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர். பங்களாதேஷ் அணியில் எபாதத் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…