#SAvIND: முதல் போட்டியை கைப்பற்றுமா இந்தியா? தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டில் தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு.
இன்று நான்காவது நாள் செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 34, கேஎல் ராகுல் 23, ரஹானே 20, விராட் கோலி 18 ரன்கள் எடுத்தனர்.
தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் ரபாடா, மார்கோ ஜான்சன் தலா 4, லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டில் தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.