ஃபிஃபா உலகக்கோப்பையின் போர்ச்சுகல்-உருகுவே போட்டியில் வானவில் கொடியுடன் மைதானத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு போராட்டக்காரர், நீல நிற சூப்பர்மேன் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு அதன் முன்புறம் உக்ரைனைக் காப்பாற்றுங்கள் என்றும், பின்புறம் ஈரானியப் பெண்ணுக்கு மரியாதை என்றும் எழுதி, வானவில் கொடி ஏந்தி மைதானத்தின் நடுவே ஓடினார்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட 30 வினாடி மைதானத்தில் இருந்த அந்த நபரை, காவலாளர்கள் பாதுகாப்புடன் வெளியே அழைத்து சென்றனர். சுரங்க ப்பாதை வழியாக வெளியேற்றப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்து அடையாளம் தெரியவில்லை.
ஆனால் இத்தாலிய பத்திரிகையான ஏஜிஐ (AGI) போராட்டக்காரர், இத்தாலியை சேர்ந்த மரியோ பெர்ரி என்பவர் என அடையாளம் கண்டுள்ளது. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பையின் போதும் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தியவர் என்பதும், மேலும் இவர் இதேபோல் பல போராட்டங்களை நடத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
போர்ச்சுகல் வீரரான ரூபன் நெவ்ஸ், இது குறித்து கூறும்போது உலக கோப்பையில் இது போன்று நடப்பது மிகவும் சாதாரணம் என்றும், கண்டிப்பாக உக்ரைன், ஈரானுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார். அவரின் செய்தியை நாங்கள் புரிந்து கொண்டோம், இந்த உலகமும் புரிந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறன் என மேலும் கூறினார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…