சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சாரா டெய்லர்..!

Default Image

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை நேற்று அறிவித்தார்.மூன்று வகையான போட்டிகளில் சேர்த்து 244 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.அதில் 12 ரன்அவுட். சாரா டெய்லர்  மூன்று வகையான விளையாட்டில் 226 போட்டிகளில் விளையாடி 6,533 ரன்கள் எடுத்து உள்ளார்.

126 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 20 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும் 90 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,177 ரன்கள் எடுத்துள்ளார்.இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் நேற்று தனது ஓய்வை அறிவித்தார். இது குறித்து  சாரா டெய்லர் கூறுகையில் ,சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது கடினமான முடிவு.சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்து இருப்பதாக உணருகிறேன்.மேலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை என்னால் மறக்க முடியாது.இவ்வளவு நாள்கள் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

மேலும் சமீபத்தில் இவர் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்