துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?
இந்திய உள்ளுர் தொடரான துலிப் டிராபியில் 1740 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் 1740 சுமார் 4 வருடம் 9 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் கேரியரில் சதம் அடித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் அடுத்த 8 வருடங்களில் 10 சதங்கள் தொடர்ச்சியாக அடித்தார். துலிப் ட்ராபி தொடரில் இந்தியா – B அணியும் இந்தியா – D அணியும் விளையாடி வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்தியா-D அணியில் 7 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 101 பந்துக்கு 106 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவரது இந்த சதத்தால் சரிவிலிருந்த இந்தியா-D அணியின் ஸ்கோரும் சற்று உயர்ந்துள்ளது.
மேலும், இந்த போட்டியில் இந்தியா-B அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.சஞ்சு சாம்சனின் இந்த சதத்தின் மூலம் தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சு சாம்சன் பல வருடங்களாக இந்திய அணியில் இருந்து வருகிறார்.
ஆனால், ஏதேனும் ஒரு டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர், டி20 தொடரில் அவ்வப்போது விளையாடி வந்தார். இருந்தாலும் நெருக்கடியான சமயத்தில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டதால் இந்திய அணியில் அவருக்கான நிரந்தர இடம் என்பது இது வரை கிடைத்ததில்லை.
இந்திய டெஸ்ட் அணியை பொறுத்த வரை பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்தாலும் ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வுக்கு பிறகு அந்த இடத்தை நிறுப்பவதற்கான வீரர்கள் இது வரை தென்படவில்லை. சஞ்சு சாம்சனை பொறுத்த வரை நிதானமான ஆட்டம் தான் அவருக்கு பல முறை கைகொடுத்துள்ளது.
இதனால், கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அந்த இடத்தை ஓரளவுக்கு நிரப்பும் விளையாட்டு நுணுக்கங்கள் சஞ்சு சாம்சனிடம் இருக்கிறது. ஆனால், அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். தற்போது, 4 வருடங்களுக்கு பிறகு அவர் சதம் அடித்துள்ளதால் இந்திய அணியில் தேர்வாளர்கள் குழுவின் பார்வை சஞ்சு சாம்சன் மீது வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதனால், அடுத்தடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில், ஒரு வேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இவரது டெஸ்ட் கனவு பலிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.