மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார். சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து சஞ்சய் குமார் தேர்தலில் நிற்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் இன்று தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சாக்ஷி மாலிக் பேசுகையில், இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். 40 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் தேர்தலில் தனது வேட்பாளர் தோல்வியடைந்ததாகவும் பிரிஜ் பூஷனின் தொழில் பங்குதாரர் வெற்றியடைந்து மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
சஞ்சயின் வெற்றியைத் தாங்க முடியாத சாக்ஷி மாலிக் செய்தியாளர் சந்திப்பில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டிருப்பது, மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளதாக மல்யுத்த வீரர் வினோஷ் போகட் தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு சிறிய அளவு நம்பிக்கையும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். தங்கள் மனக்குறைகளை யாரிடம் சொல்வது என்று கூறினர். சாக்சி மாலிக் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…