நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இரட்டையர் பிரிவில் மூன்றுமுறை மற்றும் கலப்பு இரட்டையரில் மூன்றுமுறை என இதுவரை சானியா 6 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
இந்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் எதிர்த்து விளையாட உள்ளார். சானியா தனது டென்னிஸ் பயணத்தின் உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நான் 6 வயது சிறுமியாக இருந்தபோது எனது டென்னிஸ் கனவு தொடங்கியது, என் அம்மாவுடன் நிஜாம் கிளப்பில் உள்ள டென்னிஸ் மைதானத்திற்கு நடந்து சென்று பயிற்சிசெய்வேன். எனது நாட்டிற்காக பதக்கங்களை வெல்வதே எனது மிகப்பெரிய கவுரவமாகும்.
என் வாழ்நாளில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன், வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் எனக்கு உதவியவர்கள் நீங்கள் அனைவரும் தான். வாழ்க்கை தொடர வேண்டும், இது முடிவு என்று நான் நினைக்கவில்லை, இனி எனது புதிய பயணத்தின் தொடக்கம் என உணர்ச்சி ததும்பிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…