இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு இருப்பதால் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறியுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் இன்று களம் காண உள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரேன் வீராங்கனை நாடியாஉடன் சேர்ந்து 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சானியா – நாடியாஜோடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…