டென்னிஸிலிருந்து விடை பெற்றார் சானியா மிர்சா.!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப்பில் போட்டிக்கு பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
36 வயதான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கடைசி தொடரான துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப்பில் தொடரில் நடந்த போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றுள்ளார். 2003 முதல் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடிவரும் சானியா மிர்சா, 3 மகளிர் இரட்டை பிரிவு உட்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
தனது கடைசி போட்டியில் அமெரிக்க பார்ட்னர் மேடிசன் கீஸுடன் சேர்ந்து சானியா மிர்சா, ரஷ்யாவைச்சேர்ந்த வெர்னோக்கியா குடெர்மெடோவா மற்றும் லியுட்மிலா சாம்சோனோவா ஆகியோருக்கு எதிராக களமிறங்கினார். இந்த போட்டியில் சானியா மற்றும் கீஸ் ஜோடி 4-6, 0-6 என்ற நேர் செட்களில் ரஷ்ய ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முன்னதாக சானியா 2009 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 பிரெஞ்சு ஓபன் பட்டங்களையும் வென்றிருக்கிறார். தற்போது ஒட்டுமொத்தமாக சானியா. டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் சானியா, மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மெண்டராக( ஆலோசகராக) நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.