தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை அணியில் இந்தியா எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!
ஏனென்றால், அர்ஷ்தீப் சிங் 135 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார், மேலும் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வார். சில டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அவருடைய பந்துவீச்சு பெரிய அளவில் பேசப்படவில்லை என்று நினைக்கிறன்.
கடைசியாக நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் பந்துவீசி சரியில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த போட்டியில் அவர்கள் பல எளிதான பவுண்டரி பந்துகளை கொடுத்தார்கள். என்னைப்பொறுத்தவரை இவர்கள் இருவரும் இருவரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை.
கடந்த போட்டியில் செய்த தவறு அது தான். எனவே, அந்த போட்டியை விடுங்கள் வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது நான் சொன்ன வீரர்களை தேர்வு செய்யவேண்டும். அப்படி தேர்வு செய்து விளையாடினாள் நன்றாக இருக்கும்” எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…