சாய்னா நேவால் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்..?
- பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சாய்னா நெவால் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வாங்கி உள்ளார்.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் பிறந்த சாய்னா நேவால் இந்தியாவின் மிக வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.
இவர் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வாங்கி உள்ளார். 2015 ஆம் ஆண்டில் இவர் உலக நம்பர் 1 தரவரிசையை அடைந்த முதல் இந்திய பெண் பெற்றார். தற்போது அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.