SAFFC2023: சுனில் சேத்ரியின் ஹாட்ரிக்… பாகிஸ்தானை 4-0 என இந்தியா வெற்றி.!
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியின் முதல் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியின் ஹாட்ரிக் கோல் உதவியுடன், இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானைவீழ்த்தி, தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பெங்களுருவில் நடைபெற்ற குரூப்-ஏ பிரிவின் இந்தியா- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் 10வது மற்றும் 15வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல்கள் அடிக்க(பெனால்டி உட்பட), முதல் பாதியின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
Pitch-side view of @chetrisunil11’s first half goals! ???????????? What a start to #SAFFChampionship2023 for ???????? ????????
Watch live on @fancode and DD Bharti????????#INDPAK #IndianFootball ⚽️ #BlueTigers ???? pic.twitter.com/GHn8TbjEsj
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 30 நிமிடம் கழித்து சுனில் மேலும் ஒரு கோல் அடிக்க, நான்காவது கோலை உடான்டா சிங் அடித்தார். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியை ஒரு கோலும் அடிக்க விடாமல் இந்தியா ஆட்டத்தின் முடிவில் 4-0 என தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஹாட்ரிக் கோல் அடித்த கேப்டன் சுனில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 4-வது அதிகபட்ச கோல் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Perfect start to #SAFFChampionship2023 for the #BlueTigers ????
An absolutely dominant performance ???????????????????? #INDPAK #IndianFootball ⚽️ pic.twitter.com/tUEFWGUffN
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023