SAFF2023: இந்தியா vs குவைத் கால்பந்து போட்டி..! 1-1 என்ற கோல் கணக்கில் டிரா..!
இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணி தரப்பிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.
இதனால் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டி தொடங்கிய பாதி நேரத்தில் இந்திய அணியில் சுனில் சேத்ரி, ஒரு கோல் ஐந்து அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். சுனில் சேத்ரியின் கோலினால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி வரை இந்தியா முன்னிலையில் இருந்தது.
இதன்பின், குவைத் அணியில் அப்துல்லா அல்புளூஷி அடித்த பந்து கிராஸ் அன்வர் அலியின் காலில் மோதி கோலாக மாறியது. 90 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தது. மேலும், இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்த முதல் அணி குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.
Extremely unfortunate result in the end.
After dominating the game for more than 90 minutes, the #BlueTigers ???? had to settle for a draw ????#INDKUW ⚔️ #SAFFChampionship2023 ???? #IndianFootball ⚽ pic.twitter.com/2rj2fyBAf4
— Indian Football Team (@IndianFootball) June 27, 2023
முன்னதாக, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி, தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது, குவைத் அணியும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.