சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை..!
இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா (15) களமிறங்கினர். இவர் 49 பந்தில் 73 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 1989-ம் ஆண்டு 16 வயது 214 நாள்களில் இந்த சாதனையை படைத்து இருந்தார்.ஆனால் தற்போது ஷஃபாலி வர்மா 15 வயது 286 நாள்களில் அரைசதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்து உள்ளார்.