இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். அந்த காயத்திலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை. அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது.
இந்நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு முன் ருதுராஜ் காயம் சரியாகவில்லை என்பதால் பிசிசிஐ மருத்துவக் குழு அவரை சுற்றுப்பயணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ருதுராஜ் விலக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக அபிமன்யு ஈஸ்வரனை தேர்வுக் குழு நியமித்துள்ளது.
அதேபோல தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தொடை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார். தேர்வுக் குழு ரஜத் படிதார், சர்பராஸ் கான், அவேஷ் கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை இந்தியா ஏ அணியில் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் குல்தீப் யாதவ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியா ஏ அணி:
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன் ), சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், நவ்தீப் சைனி, ஆகாஷ் தீப், வித்வத் கவேரப்பா, மானவ் சுதர், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா ஏ அணியும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…