#BREAKING: ரஷ்யா – உக்ரைன் போர்: பறிக்கப்பட்ட உரிமை UEFA நிர்வாகம் அறிவிப்பு ..!

ரஷ்யாவில் நடைபெறவிருந்த 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி மாற்றம்.
உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வருகிறது.
இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி முதலில் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து UEFA நிர்வாகக் குழு இன்று ஒரு கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில் UEFA நிர்வாகக் குழு UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியை ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் Saint-Denis நகருக்கு மாற்ற முடிவு செய்தது. முதலில் திட்டமிட்டபடி மே 28 சனிக்கிழமை 9 மணிக்கு போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The 2021/22 #UCLfinal will move from Saint Petersburg to Stade de France in Saint-Denis.
The game will be played as initially scheduled on Saturday 28 May at 21:00 CET.
Full statement ⬇️
— UEFA Champions League (@ChampionsLeague) February 25, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025