உலக தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபால் இரட்டைப் பதக்கம் வென்றார்..
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை உத்தரப் பிரதேச விவசாயியின் மகள் ரூபால் பெற்றார்.
கடந்த செவ்வாயன்று, ரூபல் சௌத்ரி 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஆசிய ஜூனியர் சாதனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார், .
நேற்று இரவு நடைபெற்ற உலக U20 தடகள சாம்பியன்ஷிப்பில் கிரேட் பிரிட்டனின் யெமி மேரி ஜான் (51.50) மற்றும் கென்யாவின் டமரிஸ் முதுங்கா (51.71) ஆகியோரை தொடர்ந்து ரூபால் 51.85 வினாடிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
2018 ஆம் ஆண்டு ஃபின்லாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் கடந்து வரலாற்று தங்கத்தை வென்ற பிறகு, பெண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ரூபால் ஆவார்.