#RRvsRCB:பட்லர் காட்டடி;வெளியேறிய பெங்களூரு அணி!

Default Image

ஐபிஎல் பிளே ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூரு அணி,ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.இப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது,

இப்போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிபந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி,பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே விராட் ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து 7 ரன்களிலேயே விக்கெட்டை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து,ரஜத் படிதார் களமிறங்கிய நிலையில் டூப்ளசிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதனால் அணியின் ரன்கள் அதிகரித்த நிலையில்,டூ பிளசிஸ் 25 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 13 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால்,மறுபுறம் தனது சிறப்பாக ஆட்டத்தின் மூலம் படிதார் அரை சதம் அடித்தார்.எனினும்,15.3 ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.அதன்பின்னர் களமிறங்கியவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்களூரு  அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பிரசித் மற்றும் ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து,158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 21 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.மறுபுறம்,கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களிள் விக்கெட்டை பறிகொடுத்தார்.அவரைத் தொடர்ந்து,தேவ்தட் படிக்கலும் 9 ரன்களில் வெளியேறினார்.

இதனிடையே,களமிறங்கிய ஜோஸ் பட்லர் தனது அதிரடி  ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 106 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்று இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார்.இதனால், 18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.இதன்மூலம்,இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியது.குறிப்பாக,14 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி நுழைந்துள்ளது.

இதனிடையே,நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது சதத்தை பதிவு செய்து,ஒரே தொடரில் அதிக சதங்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் பட்லர் .

இதனைத் தொடர்ந்து,நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில்  ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதவுள்ளன.ஏற்கனவே, ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இரண்டு முறை மோதியுள்ள நிலையில், அந்த இரு போட்டியிலும் குஜராத் அணிதான் வெற்றி பெற்றுள்ளது .இதனால் நாளைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தனது பழைய கணக்கை தீர்க்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi