ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, 11 ரன்களில் ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார்.
22 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, 5 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் வெளியேறினார். அதன்பின் மார்கஸ் ஸ்டோலிஸ் – ஹெட்மேயர் கூட்டணியில் டெல்லி அணியில் ரன்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. 39 ரன்களில் ஸ்டோலிஸ் வெளியேற, அவரையடுத்து 45 ரன்கள் அடித்து ஹெட்மேயர் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்களும், திவேத்தியா, டை மற்றும் தியாகி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…