ரொனால்டோ நீங்கள் தான் எப்போதும் சிறந்தவர் G.O.A.T! கோலி புகழாரம்.!

Default Image

கோப்பை ஒருபோதும் சிறந்த வீரரை முடிவு செய்வதில்லை! நீங்கள் சிறந்த பிளேயர் என ரொனால்டோவை கோலி புகழ்ந்துள்ளார்.

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

மேலும் இந்த தொடர் தான் ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படி போர்ச்சுகல் அணியால் இந்த தொடரில் மேலும் நீடிக்க முடியவில்லை. ரொனால்டோ, மொரோக்கோவிற்கு எதிரான போட்டியிலும் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

போர்ச்சுகல் அணி தோல்வியையடுத்து, மைதானத்தில் ரொனால்டோ கண்ணீருடன் காணப்பட்டார். உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி, ரொனால்டோ குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

கோலி கூறியதாவது, கோப்பையோ, எந்தவித பட்டங்களோ உங்களை இந்த கால்பந்து விளையாட்டிலிருந்து நீக்க முடியாது, இந்த விளையாட்டிற்கு உங்களது பங்களிப்பு மிகவும் அற்புதமானது. உங்களது பட்டத்தை விட நீங்கள் விளையாட்டில் கொடுக்கும் மகத்தான பங்களிப்பு, உங்களது ரசிகர்கள் மற்றும் எனக்கும் கூட இது கடவுளின் பரிசாக பார்க்கிறேன்.

ஒரு விளையாட்டு வீரராக மிகப்பெரிய ஆசிர்வாதம் என்னவென்றால் உள்ளத்திலிருந்து முழு அர்ப்பணிப்போடு விளையாடுவது, அந்த வகையில் நீங்கள் தான் எனக்கு எப்போதும் சிறந்த பிளேயர்(G.O.A.T) Greatest Of All Time என்று ரொனால்டோவை புகழ்ந்து கோலி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்