கோகோ கோலா பாட்டில்களை நீக்கிவிட்டு தண்ணீர் குடிக்க சொன்ன ரொனால்டோ..!

மேசையில் இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்ட ரொனால்டோ.
யூரோ 2020 கால்பந்து தொடர்நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன் நேற்று மாலையில் ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அப்போது வந்தவுடன் இரு கோகோ கோலா குளிர்பான பாட்டில் அவருக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பாட்டிலை எடுத்து ரசிகர்களிடம் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொண்டார். நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார். உடற்தகுதி அடிப்படையில் சிறிதும் கவனக்குறைவைக் கூட அவர் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் ஆரோக்கியமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரொனால்டோவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Do NOT put Coca Cola in front of Cristiano Ronaldo ????
This is absolutely brilliant ???? pic.twitter.com/bw9FYlTOI4
— Goal (@goal) June 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025