மகனுக்கு பயிற்சியளிக்கும் ரொனால்டோ!
தனது மனுக்கும் கால்பந்து பயிற்சி அளித்து வரும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி’ஆர் ( தங்க கால்பந்து கோப்பை) விருதை 5 முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் உள்ள ரொனால்டோ 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக போர்ச்சுக்கல் கால்பந்து கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு FIFA ஸ்பெஷல் தி பெஸ்ட் விருது வழங்கி கவுரவித்தது. இன்றைய தலைமுறையில் சர்வதேச கால்பந்து தொடர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – மெஸ்ஸி ஆகிய இருவரின் பெயர்கள் தான் தலையோங்கி நின்றுள்ளது.
எழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரொனால்டோ தன்னுடைய கால்பந்து மூலம் மட்டுமல்லாமல், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 5 வருடம் இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்டார்.
அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது, உள்ளாடை மாடலிங் செய்து வந்த ஜார்ஜியாவுக்கு, ரொனால்டோவின் நட்பு கிடைத்தது. அதில் இருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் காதலி மூலம் ரொனால்டோவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், ஜார்ஜினா மூலமாக ஒரு இரட்டைக் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அது மட்டுமில்லாமல், தங்களின் அடுத்த இரட்டைக் குழந்தைகளை இந்தாண்டு வரவேற்கவுள்ளதாகவும் ரொனால்டோ – ஜார்ஜினா ஜோடி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கால்பந்தில் பல்வேறு சாதனைகளை படைத்த ரொனால்டோ, தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார். அதே நேரத்தில் தனது மனுக்கும் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ரொனால்டோ பதிவிட்டுள்ளார். அதில், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்காலத்தில் கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் மகன், அவரது தந்தை போல பல சாதனைகளை புரிந்து வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Present and future ???????????? pic.twitter.com/Cr6z0VNQmI
— Cristiano Ronaldo (@Cristiano) January 30, 2022