மெஸ்ஸியை முந்திய ரொனால்டோ.. ஆண்டு வருமானத்தில் புதிய உலக சாதனை!

Cristiano Ronaldo

2017ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஃபோர்ப்ஸின் உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்.

கால்பந்தாட்ட உலகில் தற்போதைய தலைமுறைகளில் ஜாம்பவான்கள் என்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி தான். கால்பந்தாட்ட உலகில் எப்போதுமே சிறந்த வீரர் யார்? என்ற ஒப்பீடு இவர்களிடையே இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ மற்றும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இடையிலான ஒப்பீடுகள் எப்போதும் இருக்கும்.

ஏனென்றால், அந்த அளவிற்கு இவர்களின் ஆட்டத்திற்கு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இது சர்வதேச போட்டிகள் என்றாலும் சரி, கிளப் அளவிலான போட்டிகள் என்றாலும் சரி. ஒருவரின் ஆட்டம் அதிரடி ரகம் என்றால். மற்றொருவரின் ஆட்டம் கிளாஸாக இருக்கும். இருப்பினும், இருவரும் தரமான வீரர்கள். இருவரும் கால்பந்து உலகின் ஆல் டைம் சிறந்த வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

இருவரும் கால்பந்தாட்ட உலகில் கிளப் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்தவர்கள். அதுமட்டுமில்லாமல், இவர்களின் ஆண்டு வருமானமும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். அந்த அளவிற்கு ஆண்டு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆண்டு வருமானத்தில், இருவருக்கு இடையே மாறி மாறி போட்டி நிலவி கொண்டே இருக்கும். இந்த நிலையில், ஆண்டு வருமானத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸியை முந்தி, 2023-ஆம் ஆண்டில் $136 மில்லியன் வருமானத்தை ஈட்டி அதிக ஆண்டு வருமானம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

அதாவது, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, ஒரு தடகள வீரரின் ஆண்டு வருமானம் அதிகம் ($136 மில்லியன்)  என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இதுகுறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரொனால்டோ 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக “ஃபோர்ப்ஸின்” உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் 2023-ஆம் ஆண்டில் ஒரு தடகள வீரரின் அதிக ஆண்டு வருமானத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் அல் நாசருக்குச் சென்றதில் இருந்து $136 மில்லியனைப் பெற்றுள்ளார்.  மே 1, 2023 வரையிலான 12 மாதங்களில், ரொனால்டோ $136 மில்லியன் (£107.5 M) [€125m] சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மெஸ்ஸி 2022-இல் முதலிடத்தில் இருந்தார், அவரது ஆண்டு வருமானம் $130m (£103m) ஆக இருந்தது, அவர் இன்னும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில் இருக்கிறார்.

ரொனால்டோவின் வருமானம் ஆன்-பிட்ச் மற்றும் ஆஃப் பிட்ச் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில், போர்ச்சுகல் இன்டர்நேஷனலில் முன்பு $46m (£35m) என்றும் இதற்கு பின் $90m (£68.5m) ஆக அதிகரித்துள்ளது. ரொனால்டோ அரேபிய அணியான அல்-நாஸருக்குச் சென்றபோது அவரது சம்பளம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் நைக்குடனான அவரது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மற்றும் அவரது CR7-பிராண்டட் வணிகப் பொருட்களால் அங்கு அவர் பெற்ற வருவாய் மிக அதிகமாக இருந்தது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்