இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் உள்ளனர்.களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர். பங்களாதேஷ் அணியில் எபாதத் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.
இப்போட்டியின் 11 வது ஓவரின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து பங்களாதேஷ் கேப்டன் மோமினுல் ஹக் பேட்டின் விளிம்பில் பட்டு பந்து விராட் கோலியை நோக்கி விரைந்தது. அப்போது ரோஹித் ஷர்மா ஒரு கையால் கேப்டன் கோலிக்கு முன்னால் டைவ் செய்து கேட்சை பிடித்தார்.
ஷர்மாவின் வியக்க வைக்கும் இந்த கேட்ச் தொலைக்காட்சியில் பல முறை ரீப்ளே செய்யப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…