10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

rohit sharma

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். 2011ம் ஆண்டு ரூ.9.2 கோடிக்கு மும்பை அணிக்குச் சென்ற ரோஹித் சர்மா 2013ம் ஆண்டு ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றார்.

ஐந்து ஐபிஎல் கோப்பைகள்

அவர் கேப்டன் பதவியைப் பெற்றதுமே 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. அந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியைத் தோற்கடித்து தங்களின் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றனர்.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

இதன் பிறகு 2015ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக இல்லை. இருந்தாலும் இறுதிப் போட்டியில், மீண்டும் ஒருமுறை சென்னை அணியுடன் மோதியது. அதில் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை பதித்தது. மேலும் இதே போட்டியில் ரோஹித் ஷர்மா 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2016ம் ஆண்டு பிளேஆஃப் சுற்றுகளைத் தவறவிட்ட மும்பை அணி, 2017ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் 14 லீக் போட்டிகளில் 10 சுற்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிளேஆஃபில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது ஐபிஎல் பட்டத்தை மும்பை அணி வென்றது.

அடுத்ததாக 2019ம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, தனது நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. இதனால் சென்னை அணியை விட மும்பை அணி ஒரு ஐபிஎல் கோப்பையை அதிகமாக பெற்று முன்னிலைக்கு வந்தது.

இணையத்தில் வைரலாகும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் பதிவு!

சிஎஸ்கேயின் சாதனையை எம்ஐ கடந்த மும்பை அணி, தொடர்ந்து 2020 ஐபிஎல்லில் டெல்லி அணியுடன் மோதிய மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தைப் பெற்றது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகவும் மாறியது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 51 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.

இவர் ஐபிஎல் வரலாற்றில் 6211 ரன்களுடன் நான்காவது அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். இதில் 3986 ரன்கள் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும்போது எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 157 இன்னிங்ஸ்களில் 25 அரைசதங்கள் அடித்துள்ளார். இதுவரை 243 போட்டிகளில் விளையாடிய ரோஹித் ஷர்மா மொத்தமாக 1 சதம், 42 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy