இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா நீண்ட மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட வந்த காரணத்தால் ரசிகர்களுக்கு அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோஹித் 0 ரன்னில் ரன் -அவுட் ஆனார்.
இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு ரன்-அவுட் ஆனது பற்றியும் போட்டியில் வெற்றிபெற்றது பற்றியும் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ரன்-அவுட் ஆனது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விஷயம். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த மாதிரி நடப்பது எல்லாம் ஒரு சாதாரணமான விஷயம் தான் எனவே இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அதிரடி காட்டிய சிவம் துபே…இந்திய அணி அபார வெற்றி ..
நான் அவுட் ஆகி களத்தை விட்டு வெளிய சென்றபிறகு சுப்மன் கில் நல்ல தொடக்கம் கொடுத்து அணியை கொண்டு செல்ல விரும்புனேன். அவரும் நன்றாக விளையாடினார் அவருக்கு அடுத்ததாக இறங்கிய ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மாவும் நன்றாக விளையாடினார்கள். இந்த போட்டியில் நாங்கள் எல்லா விதத்திலும் அருமையாக செயல்பட்டதாக நினைக்கிறோம்.
பேட்டிங்கில் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். இங்கு குளிர்அதிகமாக இருந்த காரணத்தால் முதலில் பந்து கையில் பட்டவுடன் மிகவும் வழிகொடுத்தது பிறகு நேரம் ஆக ஆக சரியாகிவிட்டது. போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…