உலகக்கோப்பை 2024 டி20 : தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது இங்கிலாந்து அணி, 16.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்முலம் இந்திய அணி 3-வது முறையாக டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எமோஷனலாக கண்கலங்கினார். விராட் கோலி அவரை பார்த்ததும் கட்டியணைத்து கொண்டார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” இந்த போட்டியில் நாங்கள் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றதாக நினைக்கிறோம். ஒரு யூனிட்டாக மிகவும் கடினமாக உழைத்தேன், இந்த வெற்றி அனைவரின் பெரும் முயற்சி.
போட்டியில் நிலைமைகள் சவாலானதாக இருந்தபோதிலும் நாங்கள் அதனை மாற்றி அமைத்தோம். பந்துவீச்சாளர்களும் பேட்டர்களும் எங்களுடைய அணியில் நன்றாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில், 140-150 சமமாக இருந்தது. ஆனால் நாங்கள் நடுவில் ரன்களைப் பெற்றோம், நானும் சூர்யாயும் இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக பெறலாம் என்று நினைத்தோம்.175 ரன்கள் மிக நல்ல ஸ்கோர், பந்துவீச்சாளர்கள் அருமையாக இருந்தனர். அக்சர், குல்தீப் துப்பாக்கி சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தினார்கள்.
விராட் கோலி நம்மளுடைய அணியின் ஒரு தரமான வீரர். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்று பேசி வருகிறார்கள். எந்தவொரு வீரருக்கும் இது போன்று நடக்கலாம். பெரிய போட்டிகளில் விராட் கோலியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 15 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடும் போது ஃபார்ம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. சிறந்த ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக விராட் கோலி வைத்திருக்கலாம்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…