தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோகித் சர்மா .! களமிறங்கும் புதிய வீரர்.!
- இந்தியா ,நியூசிலாந்து இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
- இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா ,நியூசிலாந்து இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இன்னும் குணமாகாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிசிசிஐ , நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு எதிராக மயங்க அகர்வால் களமிறங்குவர் என தெரிவித்து உள்ளது.
NEWS : Rohit Sharma has been ruled out of the upcoming ODI and the Test series against New Zealand.
Mayank Agarwal has been named as his replacement in the ODI squad. #NZvIND #TeamIndia pic.twitter.com/AUMeCSNfWQ
— BCCI (@BCCI) February 4, 2020
இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய போது ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்த போது அவருக்கு இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.