டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா சொன்ன பதில்..!

Published by
murugan

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்தபோட்டிக்கு  முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசினார். “இந்த தொடரை வெல்வதே எங்கள் நோக்கம், அணி முழுமையாக தயாராகிவிட்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வியில் இருந்து முன்னேறிவிட்டோம்.

இங்குள்ள சூழ்நிலைகள் பந்து வீச்சாளர்களுக்கு உதவுகின்றன. ஐந்து நாட்கள் இங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. இதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. போட்டி தொடரும் போது, ​​எங்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். இதற்காகத்தான் நாங்கள் விளையாடுகிறோம். சவால்களை எதிர்கொள்வோம். ஒரு வாரத்துக்கு முன்புதான் இங்கு வந்தோம். அனைத்து வீரர்களுக்கும் அவரவர் வழியில் விளையாட சுதந்திரம் உள்ளது “என கூறினார்.

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்தும் ரோஹித் சர்மா சூசகமாக பதில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, “டி20 உலகக்கோப்பையை வெல்வதில் உங்களுக்கும் ஆர்வம் உள்ளதா? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய போது  “கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்குள்ளும் உள்ளது.  சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரி, நல்லபடியாக நடக்க வேண்டும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், அதற்கான பதில் விரைவில் கிடைக்கும்” என்றார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு:

“அனைத்து பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் இங்கு முக்கியமானது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களைத் தவிர, சுழற்பந்து வீச்சாளர்களும் முக்கியமானவர்கள். எங்களிடம் இரண்டு அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் (ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா) உள்ளனர்.

அவர்களிடம் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும். இருவரும் மிகவும் ஆக்ரோஷமானவர்கள், கையில் பந்து இருக்கும்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்த நினைக்கிறார்கள். முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்வது கடினம். கேஎல் ராகுல் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் பேசினோம். இருவரும் வெவ்வேறு வகையான பந்துவீச்சாளர்கள், ஆடுகளத்தில் இருந்து நிறைய சாதிக்க முடியும்.

முகேஷைப் பற்றி பேசுகையில், ஆறு மாதங்களில் அவர் நிறைய முன்னேறியுள்ளார். எங்களிடம் சிராஜ் மற்றும் பும்ரா உள்ளனர். முகேஷ் மற்றும் பிரசித் இடையே எந்த வகையான பந்து வீச்சாளர் தேவை என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

 

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

32 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

57 minutes ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

12 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

13 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago