மீண்டும் முன்னேறுவது கடினமாக இருந்தது.. தோல்விக்கு பின் முதல் முறையாக மவுனத்தை களைத்த ரோகித் சர்மா!

Rohit Sharma

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள், அரையிறுதி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றைத்தையும் அளித்தது. பலரும் இம்முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இந்தியா கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தது போல, அணியும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை இழந்துவிட்டது.

இந்த தோல்வி இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது போலவே, கோப்பையை வெல்ல முடியாததால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்கலங்கினார்கள். தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தார்.  இந்த நிலையில், உலகக்கோப்பை தோல்வியிலிருந்து தங்களால் மீண்டும் வெளிவர முடியவில்லை என்று ரோகித் சர்மா முதல் முறையாக மவுனத்தை கலைத்துள்ளார்.

உலகக்கோப்பை முடிந்து சுமார் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக இந்திய அணி தோல்வி குறித்து ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, உலகக்கோப்பை தோல்வியால், எனது மன வேதனையை எவ்வாறு சமாளிப்பது என்று தனக்குத் தெரியவில்லை. குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றும் கடைசியில் வெல்ல முடியாததை நினைத்தால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை.

ரோஹித்தை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அதிக வாய்ப்பு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்!

முதல் சில நாட்களில் இதிலிருந்து எப்படி மீள்வது, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.  என் குடும்பத்தினர், என் நண்பர்கள் என்னைத் தொடர்ந்தார்கள், என்னைச் சுற்றி சில விஷயங்களை அழகாக வைத்திருந்தார்கள், இது மிகவும் உதவியாக இருந்தது. ஜீரணிக்க எளிதானது அல்ல, ஆனால், வாழ்க்கை நகர்கிறது, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், ஆனால் அது கடினமாக இருந்தது.

நகர்வது அவ்வளவு எளிதானது அல்ல. நான் எப்போதும் 50 ஓவர் உலகக் கோப்பையைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன், 50 ஓவர் உலகக் கோப்பை என்பது தான் நான் வெல்ல விரும்பிய மகத்தான பரிசு. இதற்காக கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது.

எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை நான் சொல்வேன். அணியை பற்றி நான் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் நாங்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இப்படிச் செயல்பட முடியாது. எனவே தோல்வியில் இருந்து திரும்பி வந்து நகர தொடங்குவது மிகவும் கடினமாக இருந்தது, அதனால்தான் நான் எங்காவது சென்று மனநிலையை மாற்ற முடிவு செய்தேன் என சோகமாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation