மாஸ்டர் பிளான் போட்ட ரோஹித்? விக்கெட் எடுத்து உலக சாதனை படைத்த அஸ்வின்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

rohit sharma Ravichandran Ashwin

புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும்  இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது.

ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்?

அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் எடுத்தால் மட்டும் தான் ரன்களை கட்டுப்படுத்த முடியும் என முடிவெடுத்து வேகமாகச் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு 7-வது ஓவரை வீச பிளான் செய்து அவரை கொண்டு வந்தார்.

அஸ்வினும், அந்த ஓவரின் ( 7.5) வீசி முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து அசத்தினார். அதாவது, நியூசிலாந்து அணித்தலைவர் டாம் லாதம் அஷ்வினிடம் 15 ரன்கள் மட்டுமே எடுத்து எல்.பி.டபிள்யூ. அவுட் ஆனார்.

சாதனை படைத்த அஸ்வின்

இந்த போட்டியில் முதல் விக்கெட் எடுத்த பிறகு அஸ்வின் உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனை தான். இதற்கு முன்பு இந்த சாதனையை 187 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் வைத்து இருந்தார்.

இந்த போட்டியில் முதல் விக்கெட் எடுத்தபோது அஸ்வின் அந்த சாதனையைச் சமன் செய்தார். அதன்பிறகு இந்த போட்டியில், இரண்டாவது விக்கெட்டாக வில் யங்கை அவுட்டாக்கி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கிரிக்கெட் வரலாறில் 188 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தது உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் ஆனார்.

இப்படியான பெரிய சாதனையை அஸ்வின் படைத்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான இந்த 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் மட்டுமில்லை மொத்தமாக 3 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். இன்னும், போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம்  விக்கெட் எடுத்த வீரர்கள்

  • IND –  ரவிச்சந்திரன் அஸ்வின் –  188
  • AUS – நாதன் லியோன்- 187
  • AUS – அவுட் பாட் கம்மின்ஸ் – 175
  • AUS -மிட்செல் ஸ்டார்க்- 147
  • ENG – ஸ்டூவர்ட் பிராட் – 134

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்