கடந்த 7 வருடங்களாக பந்து வீசாத ரோஹித்..! தரவரிசையில் ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலை ..!

Default Image

இந்திய அணி , பங்களாதேஷ் அணியுடன்  சமீபத்தில் டி20ஐ போட்டியில் விளையாடியது . இப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் ஐசிசி டி20 ஐ ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 48-வது இடம் பிடித்து உள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட ரோஹித் சர்மா 10 இடங்கள் முன்னிலையில் உள்ளார். ஹர்திக்  பாண்டியா 58 வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் டி20 ஐ கிரிக்கெட்டில் ரோஹித் ஒரு பந்து கூட வீசவில்லை . கேப்டன்களில் கடைசியாக டி20ஐ போட்டியில் பந்து வீசிய வீரர் விராட் கோலி.
விராட் கோலி 2016-ம் ஆண்டு பந்து வீசினார். விராட் கோலி ரோஹித் மற்றும்  ஹர்திக்   பாண்டியாவை விட முன்னிலையில் உள்ளார். விராட் கோலி ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்