விம்பிள்டன் 2021: காலிறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடரர்..!
ரோஜர் பெடரர் இத்தாலியின் சோனெகோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை, ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மூன்னணி வீரர் ரோஜர் பெடரர் மோதினர்.
இதில், முதல் செட்டில் லாரன்சோ ஆதிக்கம் செலுத்த பின் 2 மற்றும் 3-வது செட்களில் ரோஜர் பெடரர் சிறப்பாக விளையாடினார். இறுதியாக 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் லாரன்சோ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ரோஜர் பெடரர் விம்பிள்டன் தொடரில் 18-வது முறையாக காலிறுதிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.