ரிஷப் பண்ட் போட்ட ஒரு ட்வீட்! அதிர்ச்சியில் டெல்லி அணி.. மகிழ்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்!

நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்கு முன்பாக ரிஷிப் பண்ட் போட்ட ஒரு பதிவு ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Rishabh Pant

சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது.

சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை மறுத்தும், பொய்யான தகவலைப் பரப்ப கூடாது என கண்டித்தும் ரிஷப் பண்ட் பதிவிட்டிருந்தார்.

Read More :- “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

இது போன்ற சூழலில் நேற்று ரிஷப் பண்ட் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், “ஒருவேளை மெகா ஏலத்திற்கு வந்தால், நான் வாங்கப்படுவேனா? அல்லது வாங்கப்பட வாய்ப்பில்லையா? அல்லது எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்?” என கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்.

அது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்யும் வீரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி அணியும், ரிஷப் பண்ட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் எனவும் அதனால் அவர் திருப்தி அடையவில்லை என்பதாலும் ரிஷப் பண்ட் இது போல எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவை பதிவிட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர் மெகா ஏலத்தில் பங்கேற்றால், அவரை வாங்குவதற்கு அத்தனை ஐபிஎல் அணிகளும் போட்டி போடும். இதனால், ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வந்தால், நிச்சயம் சிஎஸ்கே அணி பெரிய தொகை கொடுத்து வாங்க முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் பதிவிட்ட இந்த பதிவால் சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மறுபுறம் டெல்லி அணி அவர் இட்ட இந்த பதிவால் அதிர்ச்சியில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்