வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றனர். முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இன்று 3 போட்டிகள் ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.கடைசி டி 20 போட்டியில் ரன் குவித்தது போல தொடக்க வீரர்கள் அடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கே .எல் ராகுல் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.பின்னர் கேப்டன் கோலி களமிறங்கிய முதல் பந்திலே பவுண்டரி விளாசினார்.அடுத்த மூன்று பந்தில் கோலி போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார்.இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 36 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்திய அணியில் கடைசி டி 20 போட்டியில் ரோஹித் ,கோலி மற்றும் கே .எல் ராகுல் இவர்கள் அடித்த அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி டி 20 தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டு வந்தனர்.
நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 114 ரன்கள் குவித்தனர்.சிறப்பாக விளையாடிய 70 ரன்னில் வெளியேற அடுத்த சிலநிமிடங்களில் ரிஷாப் பண்ட் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
ரிஷாப் பண்ட் இதற்கு முன் விளையாடிய டி 20 தொடரில் சரியாக விளையாடாதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமாக இருந்தது.ஆனால் இந்த போட்டியில் ரிஷாப் பண்ட் 71 ரன்கள் அடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து மத்தியில் இறங்கிய கேதார் ஜாதவ் அவர் பங்குக்கு 40 ரன்கள் விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 288 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெல்டன் கோட்ரெல் ,கீமோ பால் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…