ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!
ரிஷப் பண்ட் கீப்பிங் முன்பை விட மேம்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் இன்ஸ்டாகிராமின் நேரலையின் போது தெரிவித்தார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா…சூர்யகுமார்யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் பெயரை கூறி அந்த வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் எனப் பேசுவது உண்டு. அப்படி தான் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவுக்குப் பின் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் எனத் தெரிவித்து இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடனான நேரலையின் போது அவர் பேசியதாவது ” ரிஷப் பண்ட் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பதற்குத் தகுதியான ஒரு நபர். அவர் கேப்டனாக இருந்தால் சர்ச்சைகள் எழுவது உண்டு. ஆனால், அந்த சர்ச்சைகளுக்கு நான் இப்போது ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் விளையாடும் ஒவ்வொரு நேரமும் இந்திய அணிக்காகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய வீரர். இந்த ஒரு தகுதியே அவர் கேப்டனாக இருப்பதற்கு போதும்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடினார் என்றாலே எதிரணிக்கு ஒரு சவாலாகத் தான் இருக்கும். அதே சமயம், அவர் ஒரு கிரிக்கெட் கேப்டனாக டெல்லி அணியை வழிநடத்தியதையும் இருக்கிறார். எனவும் கேப்டனாகவும் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது.
இதையெல்லாம் விட நான் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், ரிஷப் பந்த் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அவர் தன்னை பெரிய ஜாம்பவான் என நிரூபிப்பார். ஏற்கனவே, அவரது கீப்பிங் வெகுவாக மேம்பட்டுள்ளது என்பதை அவர் காட்டியுள்ளார். அவர் கிரீஸில் இருக்கும் வரை நியூசிலாந்து அணியின் பந்தை விடவே இல்லை.
எனவே, தற்போதைய சூழலில், அணியின் தேர்வாளராகள் நீங்கள் எதிர்கால கேப்டனைத் தேடுகிறீர்கள் என்றால், கண்டிப்பாக, ரிஷப் பண்ட் ரோஹித் ஷர்மாவின் வாரிசாகத் தகுதியானவர். எனவே, அவரை கேப்டனாக தேர்வு செய்யலாம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் தகுதியானவர்” எனவும் முகமது கைஃப் தெரிவித்தார்.