நியூசிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர் ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே ஜோ பர்ன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார்.பிறகு நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் அடிக்காமல் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதையெடுத்து ஸ்மித் ,மார்னஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஸ்மித் அரைசதம் அடித்து 63 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி மார்னஸ் சதம் விளாசினார். இதனால் 25 வயதான மார்னஸ் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் ,7 அரைசதம் அடித்து உள்ளார்.
கடந்த நான்கு போட்டிகளில் மூன்று சதங்கள் எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த மார்னஸ் தற்போது மீண்டும் சதம் அடித்து உள்ளார்.இதன் மூலம் கடந்த 7 இன்னிங்சில் 4 சதம் அடித்து அசத்தி உள்ளார்.இதற்கு முன் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தது உள்ளனர்.
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…