ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக வேணுகோபால் ராவ் மற்றும் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல அதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இயக்குநர்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் டெல்லி அணி தெளிவான முடிவில் இருப்பதாகவும், நம்மபதக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் இருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு வேணுகோபால் ராவ் கிரிக்கெட் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் அளவுக்கு ஹேமங் பதானிக்கு அனுபவம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்தாலும். அவருடைய அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கையில் கண்டிப்பாகவே, அவர் டெல்லி அணியின் பயிற்ச்சியாளராக இருக்க மிகவும் தகுதியானவர் என்றே சொல்லலாம்.
ஏனென்றால், 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நான்கு டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் இந்திய மிடில் பேட்ஸ்மேன் பதானி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 3 முறை கோப்பைகளையும் வென்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் பிரையன் லாராவுடன் இணைந்து பணியாற்றினார், அங்கு 2021 மற்றும் 2023 க்கு இடையில் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். எனவே, இது போன்ற அனுபவங்கள் இருப்பதன் காரணமாகத் தான் அவரை பயிற்சியாளராக டெல்லி அணி தேர்ந்தெடுத்துள்ளது.
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We’re delighted to welcome Venugopal Rao & Hemang Badani in their roles as Director of Cricket (IPL) & Head Coach (IPL) respectively 🫡
Here’s to a new beginning with a roaring vision for success 🙌
Click here to read the full story 👇🏻… pic.twitter.com/yorgd2dXop
— Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2024