உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்:7 பதக்கம் வென்று இந்தியா முதலிடம்!

Default Image

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அதன்படி,உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.கடைசி நாளான நேற்று 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றனர். இருவரும் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தாய்லாந்து ஜோடியை 17-7 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டர் பிரிவில் இந்திய அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம்,இந்தியா இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

மேலும்,நார்வே அணி 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.பிரான்ஸ் அணி 3 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi