கோகோ கோலா பாட்டிலை அகற்றிய ரொனால்டோ- 4 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்!
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை அகற்றிதால் கோகோ கோலா நிறுவனத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசினார். பேசுவதற்கு முன்னதாக மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் குடிக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.
ரொனால்டோவின் செயலால் அங்கிருந்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர், ஏனெனில் இந்த யூரோ கால்பந்து தொடருக்கு கோகோ கோலா நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதுடன், பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே கோகோ கோலா நிறுவனத்தில் மதிப்பு சரிந்துள்ளதாம். அதுவும், 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாம்.