இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால் கேப்டனாக டிம் சௌத்தி செயல்படுகிறார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
சஞ்சு சாம்சன், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர் ), விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
நியூஸிலாந்து அணி வீரர்கள்:
மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, டாம் புரூஸ், ரோஸ் டெய்லர், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர், ஸ்காட் குகலீஜ்ன், டிம் சவுத்தி (கேப்டன்), இஷ் சோதி, ஹமிஷ் பென்னட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இப்போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் ,வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…