என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

Published by
murugan

முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் லீக்குகளில் விளையாட தேசிய மத்திய ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஜனவரி 1, 2024 முதல் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தங்கள் சம்மதத்தை பரிசீலிக்குமாறு விருப்பம் தெரிவித்தனர். 

என்ஓசி வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு: 

இந்நிலையில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஃபரூக்கி ஆகிய மூன்று வீரர்களை தேசிய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இது தவிர, இந்த மூன்று வீரர்கள் மீதும் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த மூன்று வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களையும் நிறுத்தியுள்ளது. இதனுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வீரர்களுக்கு என்ஓசி வழங்குவதில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் என்ஓசியை ரத்து செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐபிஎல் 2024 விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.  ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் முஜீப் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் நவீன்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாலும்,  ஃபசல்ஃபாக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாலும் தக்கவைக்கப்பட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக்:

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் என்ஓசி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலகக்கோப்பையின் போது நவம்பர் 7 அன்று  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவீன் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

10 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

11 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

12 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

12 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

13 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

13 hours ago