மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கிக்கு, கோடிகள் கொடுத்து வாங்க தயார்- ஓமன் எம்.பி

Default Image

உலகக்கோப்பை வெற்றியின்போது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கியை வாங்க விருப்பம் தெரிவித்த ஓமன் எம்.பி.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற அர்ஜென்டினா மற்றும் வீரர்களுக்கு உலகக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸிக்கு, அரபு நாட்டில் அணியப்படும் பிஷ்ட் எனும் கருப்பு நிற அங்கியை கத்தார் மன்னர் வழங்கினார், மேலும் மெஸ்ஸி இந்த அங்கியை(பிஷ்ட்டை) அணிந்துகொண்டு கோப்பையை வாங்கினார்.

பிஷ்ட் என்பது அரபு நாடுகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய ஆண்களின் ஆடையாகும், இது ஒட்டக முடி மற்றும் ஆடு கம்பளியால் ஆனது. அரபு நாடுகளில் திருமணங்கள், பண்டிகைகள், பட்டமளிப்பு போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் இது அரச குடும்பம், உயரதிகாரிகள் மற்றும் மாப்பிள்ளைகளால் அணியப்படுகிறது.

அரபு நாட்டின் மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதப்படும் இந்த பிஷ்ட்டிற்கு, ஓமன் வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகமது அல் பர்வானி, ரூ.8.20 கோடி கொடுத்து வாங்கிக்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். பிஷ்ட் என்பது ஞானம், துணிச்சல், ஒருமைப்பாடு, பெருந்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னம் என்றும் திரு பர்வானி கூறினார்.

இது குறித்து பர்வானி தனது ட்விட்டரில், உலகக் கோப்பை 2022 வென்றதற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். மேலும் மெஸ்ஸி இது குறித்து பேசவந்தால் கூடுதலாக பணம் கொடுக்கவும் தயார் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்