ஆர்.சி.பி அணியின் பெயர் மாற்றம்.? ஆத்திரமடைந்த கேப்டன்.! நடந்தது என்ன.!
- ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் புரொபைல் போட்டோ நீக்கப்பட்டது. இதை பார்த்த கேப்டன் கோலி ஆவேசம் அடைந்து அணியின் கேப்டனாக எனக்கு எந்த தகவலும் தரப்படவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதனால் அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் வருடந்தோறும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் வெற்றி நாயகனாக உலாவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் மட்டும் வெற்றியை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தொடரில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆர்.சி.பி வீரர்கள் தற்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் புரொபைல் போட்டோ நீக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியளிந்த அந்த அணியின் சாஹல், ஆர்.சி.பி சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த படங்கள் எங்கே? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். பின்னர் விரைவில் மீண்டும் சிறப்பான இணையதளத்துடன் வருகிறோம். அதுவரை ரசிகர்கள் காத்திருங்கள் என்று ஆர்.சி.பி சமூகவலைதளம் விளக்கம் அளித்திருந்தது. இதுதொடர்பாக இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில், பதிவுகள் நீக்கப்பட்டதுள்ளது என்றும், அணியின் கேப்டனாக எனக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. உங்களுக்கு எதாவது உதவி வேண்டுமென்றால் தெரியப்படுத்துங்கள் என்றுள்ளார்.
Posts disappear and the captain isn’t informed. ???? @rcbtweets, let me know if you need any help.
— Virat Kohli (@imVkohli) February 13, 2020
இதனிடையே, ஆர்.சி.பி-யின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் ஸ்பான்சர் மற்றும் பெயர் மாற்றமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு தொடருக்கு ஆர்.சி.பி அணியின் டைட்டில் ஸ்பான்சாராக முத்தூட் ஃபின்காரப் நிறுவனம் ஒப்பந்தமாகி உள்ளது. இதன் காரணமாக பதிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பெங்களூர் பெயரை பெங்களூரூ என மாற்றிய பின்னும் ஆர்.சி.பி பெங்களூர் என்றே தனது பெயரில் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ என்று பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.