கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் பரிந்துரை…! அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், ராகுல் பரிந்துரை…!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும், அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இவ்விருதுக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது.
அதே போல் அர்ஜுனா விருது இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்படும் விருது ஆகும்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதே போல் அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர்களான ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025